ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய மழை

செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (14:22 IST)
ஈரோடு மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடிய, விடிய கொட்டிய மழையினால் கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழையில்லாத காரணத்தால் கடுமையான வெப்பம் வீசி வந்தது. இதன் காரணமாக விவசாய கிணறுகளில் தண்ணீர் கீழ்நோக்கி சென்றதால் கடும் வறட்சி ஏற்பட்டது.

விவசாயிகள் குடிநீருக்கே தவிக்கும் நிலை ஏற்பட்டதால் தங்கள் கால்நடைகளை குறைந்த விலைக்கு கர்நாடக மாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லேசாக மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் நேற்‌றிரவு இடி, மின்னலுடன் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக கடும் வெப்பம் குறைந்து தற்போது குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்