இளைஞர் காங்கிரஸ் தலைவி தூக்குப்போட்டு தற்கொலை

புதன், 12 டிசம்பர் 2012 (10:52 IST)
FILE
காஞ்‌சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொ‌ண்ட ச‌ம்பவ‌ம் க‌ட்‌சி‌யின‌ர் இடையே பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌திய‌ள்ளது.

காஞ்‌சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அகரம்தூளி கிராமத்தை சேர்ந்தவ‌ர் எஸ்.டி.நெடுஞ்செழியன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளராக இவரது மகள் எஸ்.டி.என்.ஐஸ்வர்யா (25). பி.டெக். என்ஜினீயர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த காஞ்‌சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் அணி சார்பில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார். 1,260 வாக்குகள் கூடுதலாக பெற்று தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமை பெற்ற இவர் தீவிர கட்சி பணியாற்றி வந்தார்.

இவருக்கு அடையாறு இந்திரா நகரில் சொந்த வீடு உள்ளது. கடந்த 5ஆ‌ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற எஸ்.டி.என்.ஐஸ்வர்யாவை சென்னையில் உள்ள பிரபல தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமதித்தனர். குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. வயிற்றுவலி தாங்க முடியாத அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் கூறப்பட்டது.

அடையாறு போ‌‌லீசா‌ர் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யாவிடம் வாக்குமூலம் பெற முயன்றனர். அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை. நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து அவர் வயிற்று வலியால்தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்