இலங்கையின் கொலைக்களங்கள் - கிராமம் கிராமமாக திரையிடல்

சனி, 24 மார்ச் 2012 (21:06 IST)
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அந்நாட்டு ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவித்தது.

இனப்படுகொலை செய்த இலங்கையின் இந்த குற்றச்செயலை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தியது பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி.

தான் வெளியிட்ட இலங்கையின் கொலைக்கலங்கள் என்ற ஆவணப்படத்தில் போர்க்குற்றம், மனித உரிமை மீறல், இனப்படுகொலை செய்ததற்கான ஆதரங்கள் தெள்ள தெளிவாக பன்னாட்டு சமூகத்திற்கு எடுத்து காட்டியது.

இதனைப்பார்த்த மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்தெழுந்து, இலங்கையை போர்க்குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

அதன் முதற்படியாக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் நிறைவேறியது.

இந்நிலையில், சேனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற புரிந்து, மனித உரிமை மீறிய, ஈவிரக்கமற்ற செயலில் இலங்கை ராணுவம் ஈடுபட்ட காட்சிகள் கொண்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் கிராமங்கள் தோறும் பல்வேறு அமைப்புகள் திரையிட்டுவருகின்றன.

நாம் தமிழர் கட்சியினர் கிராமங்களில் தொலைக்காட்சி மூலம் திரையிட்ட காட்சிகள்...
webdunia photo
WD

webdunia photo
WD

WD

webdunia photo
WD

வெப்துனியாவைப் படிக்கவும்