இலங்கைக்கு தமிழக அரசியல் குழு செல்ல வாய்ப்பு : கனிமொழி

திங்கள், 8 ஜூன் 2009 (10:34 IST)
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அங்குள்ள உண்மை நிலையை அறிவதற்காக தமிழக அரசியல் குழு செல்ல வாய்ப்பு இருப்பதாக ‌தி.மு.க.வை சே‌ர்‌ந்த மா‌நில‌‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொழி தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

WD
இலங்கை அரசின் இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு துறை அமை‌ச்ச‌ர் ஆறுமுக தொண்டைமான், புணர்பயிற்சி துறையின் துணை அமை‌ச்ச‌ர் சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் சங்கத்தின் துணை தலைவர் செந்தில் தொண்டைமான், இலங்கை துணை தூதர் அம்சா ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதி வீட்டில், மா‌நில‌ங்களவை உறு‌‌ப்‌பின‌ர் கனிமொழி நேற்று சந்தித்து பேசின‌ர். இ‌ந்த ச‌ந்‌தி‌‌ப்பு அரைமணி நேரம் நடந்தது.

இந்த சந்திப்புக்கு பின்ன‌ர் கனிமொழி‌யிட‌ம் ச‌ெ‌ய்‌தியாள‌ர்‌க‌ள், இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு என்னென்ன உதவிகளை செய்ய உள்ளது எ‌ன்று கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஏற்கனவே இந்திய அரசு ரூ.500 கோடி அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்து முழு ஈடுபாட்டுடன் அறிந்து, அதையும் நிறைவேற்றுவதாக கூறியுள்ளது எ‌ன்றா‌ர்.

இலங்கையில் போர் முடிந்துள்ள சூழ்நிலையில், அங்குள்ள உண்மை நிலையை அறிய தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய அரசியல் குழு அனுப்பப்படுமா எ‌ன்ற ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு ப‌‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், இதுகுறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும். அதற்கான வாய்ப்பு உள்ளது எ‌ன்றா‌ர்.