மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் ரோசி மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார். உறவினர் யாரும் இல்லாததால், அவரது இறப்பிற்கு பிறகு, யார் உடலை அடக்கம் செய்வது என்று அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பியதை அடுத்து ரோசி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால், ரோசி தான் கூலி வேலைக்கு சென்று, அதில் வரும் வருமானத்தை வைத்து, சிறிய அளவில் நிலம் ஒன்று வாங்கி வீடு ஒன்று கட்டிக்கொண்டுள்ளார்.
மேலும், தன் வீடு அருகே ஒரு கல்லறை கட்டி அதன் மீது சிலுவை குறியையும், அதன் அருகே தனது உருவ படத்தையும் வரைந்து வைத்துள்ளார்.