ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் கண்கள் தானம்!

ஞாயிறு, 24 பிப்ரவரி 2013 (13:44 IST)
FILE
சென்னையில் இன்று ஆசிட் வீச்சுக் கொடுமைக்கு இரையான மற்றொரு பெண் வித்யாவின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.

வித்யாவின் குடும்பம் ஏழ்மையானது. தந்தையை சிறு வயதிலேயே இழந்து விட்டதால் தாய் சரஸ்வதி கூலி வேலை செய்தும், வீட்டு வேலைகள் செய்தும் மகள், மகனை காப்பாற்றினார்.

குடும்ப சூழல் காரணமாக பிளஸ்௨ வரை மட்டுமே படித்தார். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பிரவுசிங் செண்டரில் வேலை செய்து வந்தார் வித்யா.

அண்ணன் விஜய்யும் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு போனார். வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்.

கண்தானம் செய்வதின் அவசியத்தை உணர்ந்த அவர் தனது கண்களையும் தானம் செய்ய விரும்புவதாக கூறிவந்தார். அவர் விருப்பப்படியே வித்யா இறந்ததும் அவரது கண்கள் எழும்பூர் கண் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தாய் சரஸ்வதி கூறும்போது, கணவரை இழந்த நான், மகன், மகள் என 3 பேரும் வேலைக்கு போய்தான் குடும்பம் நடத்தி வந்தோம். என் மகளை இழந்த வேதனையில் எங்களால் வேலைக்கு செல்ல இயல வில்லை. நாங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கிறோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்