பக்ருதீனை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த கோ‌ரி வழ‌க்கு

வியாழன், 10 நவம்பர் 2011 (13:08 IST)
பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவை சேர்ந்த எம்.அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவ‌‌ல்துறை‌யினரா‌ல் 2003ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கு மீதான விசாரணை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ளது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன்.

இந்த நிலையில், கடந்த 2ஆ‌ம் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி 'என்கவுண்ட்டர்' மூலம் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரகீமும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவு‌ம் இல்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தப்பட‌வில்லை.

வாழும் உரிமைக்கு எதிராக போலீசார் செயல்பட்டு பக்ருதீனை அடைத்து வைத்துள்ளனர். அதோடு டி.கே.பாசு வழக்கில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் பிறப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. எனவே பக்ருதீனை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க காவ‌ல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இரு‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்