தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கூ‌ண்டா சட்டத்தில் கைது

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2011 (10:55 IST)
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனும், அவரது உதவியாளர் கவுரிசங்கரும் கூ‌ண்டா ச‌ட்ட‌த்‌தி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இது தொடர்பாக சென்னை மாநகர காவ‌ல்துறை நே‌ற்‌றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாமலை அவென்யூவில் 20.59 ஏக்கரில் அமைந்துள்ள ரூ.150 கோடி மதிப்புள்ள 300 வீட்டு மனைகளை போலி ஆவணம் மற்றும் மிரட்டல் மூலம் குடிசை போட்டு ஆக்கிரமித்து அபகரித்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனும், அவரது உதவியாளரும், நெருங்கிய கூட்டாளியுமான வெங்கடேசன் என்ற கவுரிசங்கரும் கைது செய்யப்பட்டு ‌வேலூ‌ர் ‌சிறை‌யி‌ல் அடைக்கப்பட்டனர்.

தற்போது நொளம்பூர் காவ‌ல் நிலைய ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் ரங்கநாதனும், அவரது உதவியாளர் கவுரிசங்கரும் நிலம் ஆக்கிரமிப்பாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் 8.8.2011 (நேற்று) முதல் கூ‌ண்டா தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் பிறப்பித்துள்ளார் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்