தற்கொலை செய்வதற்கான எண்ணங்களை தடுக்கும் வழிமுறைகள்

தற்கொலை தொடர்பாக மனிதர்கள் தம் வாழ்வில் ஒரு தரமாவது சிந்தித்திருப்பார்கள் எனக் கூறப்படுகின்றது. 


 


தற்கொலை என்பது உலகத்தில் பொதுவாக காணப்படுகின்ற ஒரு அம்சமாகும். ஆனால் பிற பிரச்சனைகள் போல இதற்கு அந்தளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலகத்திலுள்ள சமூகங்களால் மிகவும் தவறாகவும் குறைவாகவும் மதிப்பிடப்பட்ட சமூக நலப் பிரச்சனைகளில் தற்கொலையும் ஒன்றாகும். ஆயுத முரண்பாடுகளாலும் மற்றும் வீதி விபத்துக்களாலும் உலகத்தில் இறப்பவர்களுக்கு சமமாக அல்லது அதற்கும் அதிகமாக தற்கொலையினால் இறப்பவர்கள்  இருக்கின்றனர்.
 
தற்கொலை செய்பவர்களுக்கு வறுமை, பாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவுகள், சித்திரவதைகள், வேலையில்லாமை, கல்வி கற்கமுடியாமை, மற்றும் பல்வேறு தோல்விகள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இக் காரணங்கள் குறிப்பிட்டவர்களைப் பொறுத்தவரை வலுவானவை.
 
தற்கொலை செய்யாத ஒரு சமூகத்தை உருவாக்கவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. இதற்கு எவ்வாறு தற்கொலைகளைத் தடுப்பது, அதற்கான காரணங்களை நிவர்த்தி செய்வது, மற்றும் அதற்கான மருத்துவ, உள, மன, வள சிகிச்சைகளை அளிப்பது என்பது தொடர்பாக நாம் சிந்திக்கவும் அதற்காக செயற்படவும் வேண்டும். 
 
மேலும் ஒருவரை தற்கொலை செய்வதிலிருந்து காப்பாற்றுவதற்கான அவசர முதலுதவி வழிமுறைகளையும் அறிந்திருக்கவேண்டும். தற்கொலை முயற்சி ஒன்று நடைபெறும் பொழுது அதைத் தடுப்பதற்கு பெரும்பாலும் நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. அவை திட்டமிட்டதாகவோ அல்லது திட்டமிடப்படாத உடனடி செயலாகவோ இருக்கலாம். 
 
ஆனால் அவ்வாறான எண்ணங்கள் குறிப்பிட்ட மனிதர்களில் இருப்பதை ஏற்கனவே இனங்கண்டு கொள்வதனுடாக தற்கொலை செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு தடுக்க முயற்சிக்கலாம். இரகசியமாக பிறருடன் உரையாடுவதோ அல்லது அறிந்தும் அறியாதவாறு அமைதியாக இருப்பதோ, அல்லது புறக்கணிப்பதோ ஆரோக்கியமானதல்ல. இவை ஏதுவும் தற்கொலை செயல்கள் நடப்பதை தடுத்து நிறுத்தாது.  மாறாக இவர்களுடன் நேரடியாகவும் வெளிப்படையாகவும் தற்கொலை தொடர்பாக கலந்துரையாடுவதே ஆரோக்கியமானது பயனுள்ளதுமாகும்.ஒரு புறம் தற்கொலை நடைபெறாது தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை, அது தொடர்பான கருத்தியல் வரலாற்றில் எவ்வாறு மாற்றமடைந்து வந்திருக்கின்றது என்பதை அறிவதும் பயனுள்ளதாகும்.
 
தற்கொலை எண்ணங்களை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளது.
 
ஒன்று வலியை குறைக்க முயற்சிப்பது, மற்றொன்று வலியை நீக்கும் உதவியை அதிகமாக பெறுவது.
 
யோகா மன அழுத்தத்தை கையால இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக பயன்பட்டு வருகிறது. அதனால் உங்கள் தற்கொலை எண்ணமும் தொலைந்து போகும். ஆரோக்கியமான உடலுக்கு தேவையானதெல்லாம் தினமும் யோகா மற்றும் தியானம் மட்டுமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமநிலையை கொண்டு வருவதற்கு யோகா பெரிதாக உதவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்