கொரோனாவைச் சமாளிக்க
இந்த பூவுலகில்
பூத்த வல்லரவு நாடுகள் முதற்கொண்டு
ஏனைய வளர்ந்துவரும் நாடுகள் வரை
அனைத்தும் திணறி வருகிறது …
கோவிட் 19 எனும்
கொடூர வைரஸை சரிசெய்ய
உலகப் பிரசித்தி பெற்ற
மருத்துவர்களும் ஆய்வாளர்களும்
பெரும் பல்கலைகழகங்களும்
முயன்று பரிசோதித்து வருகின்றனர்.
நம் இந்திய அரசும் 21 நாட்கள்
ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து
மக்கள் நலனைக் காக்கப் பொறுப்பெடுத்துள்ளது.
ஆன படியால் நான் சுயசுத்தத்தை
கடைப்பிடித்தபடி
நம்மைக் காத்துக்கொள்வோம்.
சமூக விலகலைக் கைக்கொண்டு
மனித சமூதாயத்தைப் பேணுவோம்.
இதற்கு நாம் செய்ய வேண்டிய
பேருபகாரம் என்னவென்றால்
அரசாங்கம் சொல்வது போல்
நம்மைத் தனிமைப்படுத்தி
வீட்டிற்குள் வசிப்பது ஒன்றுதான் !
நம் தேசத்தை அழிவின் பிடியில் இருந்து காக்க
இப்போதைக்கு வீட்டில் தனித்திருப்பது என்பது
நம் ஆற்றலை மேம்படுத்தி, குடும்பத்தின்
உறவுகளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவது மட்டுமல்ல ..
இது நம் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய
ஜனநாயகக் கடமையும் கூட.