"என் மக்களை நனையவிடக் கூடாது" - குடை (கவிதை)

வெ.சுரேஷ்

புதன், 7 ஜனவரி 2015 (11:22 IST)
குடை

ஒருநாள் காலை குடையிடம் கேட்டேன்
 
நீ விரும்புவது மழையில் நனைவதையா?
வெயிலில் காய்வதையா? என்று...
 
குடை மெதுவாகச் சிரித்தது, பின்னர் சொன்னது...
என் கவலை இதைப் பற்றியது அல்ல... என்று
 
பின் எதைப் பறியது என்று கேட்டேன்..
குடை சொன்னது...
 
எனது கவலையெல்லாம்
எப்படிப்பட்ட அடைமழையானாலும்
என் மக்களை நனையவிடக் கூடாது
எப்பேர்பட்ட கொடிய வெயிலானாலும்
என் மக்களை காயவிடக்கூடாது...
 
 
                                                      -  அய் குங் (Ai Qing)
                                                         சீன நாட்டுக் கவிஞர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்