'வாழ்வாய் நீ நல்ல காதல் நாட்டில் உள்ளவரை!' - கவிதாஞ்சலி!

வெள்ளி, 4 ஜூலை 2014 (09:47 IST)
எழுகின்ற நெருப்பின் புகை செல்லும்
வானோக்கி
சுழிக்கின்ற வெள்ளம் புகும்
நிலவெடிப்பில்
உயிர்புகுந்த காதலில்
உயிரிழந்து விட்டாய்
தம்பி
ஓராண்டாகிறது உனைக் கொன்று
தவிக்கின்ற மனமெங்கும் 
தனலெழுதி நிற்கின்றாய்
தாங்கவெண்ணா மரணத்தைக்
கைவாங்கி வீழ்ந்திட்டாய்
தமிழராய் இரு என்று சொன்னாரெல்லாம்
வாய்பொத்தி ஓட்டளித்தார்
தடவுகின்றோம் உன் உடலின்
காயங்களை
கற்பனைக் காதலின்
கதைநாயகனைக் கொண்டாடும் மக்கள்
உண்மைக் காதலன்
உனைக் கொன்று போட்டனர்
காதல் என்பதோர் நனவிடைத்தோய்தலில்
உன் பெயரையே உச்சரிப்பர் அனைவரும்
பற்றவைத்த பெருநெருப்பு அழிப்பது வேண்டுமானால்
நம் வீடுகளை
வாழ்வுகளை அல்ல
வாழ்வாய் நீ நல்ல காதல்
நாட்டில் உள்ளவரை
 
நன்றி: தோழர். யாழன் ஆதி

வெப்துனியாவைப் படிக்கவும்