நாடு பார்த்ததுண்டா? இந்த நாடு பார்த்ததுண்டா?

தொகுப்பு: தேமொழி

வியாழன், 2 அக்டோபர் 2014 (19:55 IST)
2 அக்டோபர் 1975 அன்று கர்ம வீரர் காமராசர் மறைந்தார். பெருந்தலைவரின் நினைவு தினம், இன்று. அதையொட்டி, இந்தச் சிறப்புப் பதிவு
 
முதலில் அவரை நேரில் பார்க்காத இந்தத் தலைமுறைக்காக, இதோ அவரது குரல். மிகச் சிறிய இந்தப் பதிவைக் கேளுங்கள்.
 
அடுத்து இந்தப் பாடலைக் கேளுங்கள்:
 
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

இசையமைத்துப் பாடியவர்: இளையராஜா
பாடல்: வாலி
 
ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ
ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ
ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ
 
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
 
பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தைப் பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டுப் படிக்க வைத்தானடா
 
மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா
ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானடா
 
இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே
திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே
 
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
 
பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா
தனைப் பெற்ற தாயை விடப் பிறந்த நாடு தான் பெரிது என்பானடா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரைத் தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே
 
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

வெப்துனியாவைப் படிக்கவும்