வேடனுக்கு நம்பிக்கை முறிக்க தெரியவில்லை.....

லெனின் அகத்தியநாடன்

செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (15:19 IST)
வேடனுக்கு நம்பிக்கை முறிக்க தெரியவில்லை.....
 
சிறகிழந்து வீழ்ந்து கிடக்கிறது
ஒரு சின்னஞ்சிறிய பறவை
அது எழுவதும் வீழ்வதுமாக துடிதுடிக்கிறது...
 
மீண்டும் மீண்டும் அவ்வாறே.
அது பறந்துசெல்ல துடிக்கிறது..
 

 
அதன் ஒரே நம்பிக்கை
இப்போது அதற்கு
சிறகு முளைத்துவிடும் என்பதல்ல
உயரே விரிந்த வானம்
ஒன்று இருக்கிறது என்பது மட்டுமே...
 
வேடனுக்கு அதன்
சிறகை முறிக்கத் தெரிந்திருக்கிறது.
ஆனால் அதன் நம்பிக்கையை?..


- லெனின் அகத்தியநாடன்

வெப்துனியாவைப் படிக்கவும்