விழிகள் மோதிடும் நேரம்

ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (09:13 IST)
விழிகள் மோதிடும் நேரம்

புது கவிதைகள் பாடிடத் தோன்றும்

பனித்துளி பொழிந்திடும் நேரம்

என் மனமதில் உறைந்திடக் கூடும்
 

உன் இதழ்களைப் பார்க்கும் நேரம்

என் இதழ்களை இடம் மாற்றிடத் தோன்றும்
 

கொடியிடை கொஞ்சிடும் நேரம்

மனமதில் மயங்கிடக் கூடும்

அன்புத் துளிகள் சிந்திடும் நேரம்

புது சித்திரம் வரைந்திடத் தோன்றும்

 
                                               - ரா.அருள்
 

வெப்துனியாவைப் படிக்கவும்