சாதிக்காத சாதி....

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (01:35 IST)
சாதிக்காத சாதி....

உலக நாடுகளில் எங்கும் இல்லாத அளவு இங்கு தான் கொட்டிக்கிடக்கின்றது சாதி என்னும் சகதி.. இந்த சாதி, மனிதர்களுக்கு செய்த நன்மமையைவிட தீமைகள் தான் அதிகம். ஆனாலும், அதை மனிதன் இன்றும் மறந்தும் கூட கைவிட மறுக்கின்றார்கள். அதை, கவிஞர் தனது கவிதைகள் மூலம் விளாசித்தள்ளியுள்ளார் மிக அழகாக. 
 

 
 
 
ஆதார் அட்டை, வாக்காள அட்டை
 
ரேஷன் அட்டை என்று
 
தன்மேல் ஊரும் அத்தனை
 
அட்டைகளையும்
 
சலுகைக்காகச் சுமக்கும்
 
எந்த ஓர் இந்தியனுக்கும்
 
தலையில் ஊறுவது என்னவோ
 
சாதி என்னும் அட்டைதான்...!
 
- அமுதா முருகேசன்

வெப்துனியாவைப் படிக்கவும்