2016 ஐ நம்பிக்கையோடு வரவேற்போம்
துன்ப துயரத்துடன் கடந்து சென்ற 2015 க்கு விடைகொடுத்து உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் 2016 ஆம் ஆண்டை வரவேற்போம்.
இன்பத்தையும் துன்பத்தையும் தந்து
கழிந்தது 2015...
சென்னை வாசிகளுக்கும்
காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மக்களுக்கும்
துன்பத்தை நினைவுபடுத்தும் ஆண்டாக
வேதனையோடும் வலியோடும்
கரைந்தபோன கனவுகளோடும்..
கடந்துபோனது 2015...
இன்னும் மீள முடியாத துயரத்தில் தத்தளிக்கும்
மக்களுக்கு என்ன சொல்லி புத்தாண்டு வாழ்த்து சொல்ல...
வறுமையில் வாடி
குழிவிழுந்த நமது கன்னங்களைப்போல
ஏழையாய் பள்ளத்துடன் காணப்படும் சாலைகளில்
குலுங்கிக் குலுங்கி செல்லும்
என் மக்களுக்கு என்ன சொல்லி புத்தாண்டு வாழ்த்து சொல்ல...
ஆண்டாண்டு காலமாய் குருவியைப்போல்
கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த பெருட்களை எல்லாம்
மொத்தமாக இழந்துநிற்கும்
என் மக்களுக்கு என்ன சொல்லி புத்தாண்டு வாழ்த்து சொல்ல...
நீந்தி நீந்தி உயிருடன் கரைசேர்ந்தாலும்
இனி எப்படி கரை சேரப்போகிறோம் என்று
ஏங்கித் தவிக்கும்
என் மக்களுக்கு என்ன சொல்லி புத்தாண்டு வாழ்த்து சொல்ல...
எத்தனையோ இழந்த போதும்..
முகம் தெரியாத மனிதர்களை
உறவுகளாக்கி ஒன்றுபடுத்தி...
நெருக்கடி காலத்தில் ஒன்று சேர்ந்தே ஆகவேண்டும் என
வலியோடும் வேதனையோடும்
உணர்த்திய 2015
நமது பலத்தையும் பலவீனத்தையும்
நினைவில் நிறுத்திச் சென்றது...
ஓ... என் தேசத்து மக்களே
இன்னும் நமது வாழ்க்கைக்கு விடிவு வரவில்லை
ஏங்கங்களுடனும் எதிர்பார்பபுகளுடனும்
ஒவ்வொரு புத்தாண்டும் துவங்குகிறது...
சுமைகளையும்..
சோகங்களைம் கூட்டியபடி
நாம் வெறும் பார்வையாளர்களாக
பயன்பாட்டாளர்களாக...
வாக்காளர்களாக... மட்டுமே இருக்கும் வரை
நமக்கு விடியல் சாத்தியமில்லை...
எப்போதும் போல...
புத்தாண்டின் விடியலை...
வாழ்வின் விடியலை
எதிர்பார்த்தபடி
2016 ஐ வரவேற்போம்...
நமக்கான வாழ்க்கையை நமது விடியலை
யாரும் கொடுக்கப் போவதில்லை
நாம்தான் பெற்றாக வேண்டும்
ஒன்று சேர்ந்து போராடியபடி
நாம்தான் பெற்றாக வேண்டும்...
இதை உணர்த்திச் சென்ற 2015 ஐ
நினைவில் நிறுத்தி
2016 ஐ வரவேற்போம் பங்கேற்பாளர்களாக...
இப்போது நம்கையில் உள்ளது 2016....
- சுரேஷ் வெங்கடாசலம்
அனைவருக்கும் வெப்துனியாவின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்