மனக்குன்றின் மேல்...

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (17:30 IST)
மு‌த்து‌க்குமா‌ரி‌ன் மனக்குன்றின் மேல் எ‌ன்ற க‌‌வித

மனக் குன்றின் மேல் ஆதரவற்று
தூக்கியெறியப்பட்டேன்;

எல்லாமே சிறிதாக,
சிறிது சிறிதாக
தூரத்தே விலகின.

வார்த்தை மைதானங்கள்
உணர்வுகள்,
பயங்கள்,
வெட்கங்கள்,
கோபங்கள்
ஆசைகள்
ஆகிய ஒண்டுக் குடித்தனங்கள்
அனைத்துமே சிறிதாக...
சிறிது சிறிதாக...

கைகளின் கீழ்
கல்தரை;
இங்கும் ஏதேனும் முளைக்கலாம்;

மலயோரத்தில்
தெரியாத தாவரம்
காற்றைத் தாலாட்டுவதாய்
விவரமறியா இறுமாப்புடன்
பரட்டைத் தலையாட்டுகிறது

உறுதியான கால்களுடன் மிருகங்கள்
சில அருகே உலாத்துகின்றன;

அடைக்கலம் தேடி உட்புகுந்த மகா பறவைகள்
குன்றைவிட்டுச் சென்று குன்றை நோக்கி எக்காளமிட்டுச்
சிரித்தன;

புகலிடமின்றி
மன மலையின் முகட்டில்...
நான்?

வெப்துனியாவைப் படிக்கவும்