பெருவெளிப் பெண்

புதன், 11 நவம்பர் 2009 (15:46 IST)
பெருவெ‌ளி‌ப் பெ‌ண் எ‌ன்ற க‌விதை பு‌த்தக‌த்‌தி‌ல் இரு‌ந்து பெருவெ‌ளி‌ப்பெ‌ண் எ‌ன்ற தலை‌ப்‌பிலான க‌விதை இ‌ங்கே.

உர்யிர்ப்புகளின் கருவூலமாய்
மரபணுக்களின் கிடங்காய்
அகிலத்தின் இரகசியமாய்

கருக்களைச் சுமந்து
உயிரொலி மீட்டி
உயிர்ப் பெருக்கமும்
உலகின் இயக்கமும்
யாம்
சுற்றிப் புகையும்
புரியாத பலப்பல தத்துவங்கள்
தொடரும் வன்முறைகள்
ஈட்டிகளாகவும் ஆயுதங்களாகவும்
எம்மீது தொடுக்கப்படும் வன்முறைகளைப்
புனிதப் போர்களெனச் சாற்றிக் கொள்ளலாம்

உயிர்க்குஞ்சுகளைச் சுமந்து ஓடி ஒளிகிறோம்
பள்ளத் தாக்குகளிலும் காடுகளிலும் புதைகுழிகளிலுமாக
ஈன்ற சிசுக்களின் அழுகுரல்கல்
எம்மை இயக்கித் தீர்க்கின்றன

உயிர்வளியை ஊதியெழுப்புகிறோம்
சூறாவளியென

கொசாவா ஈழம் ஆப்கான் என
வரைபடத்தின் தொடரும் வன்முறைகளில்
பிரிவுகளின் துயர இசையே
எதிர்பாடலாக வடிக்கிறோம்.

அரசியல் எதிர்வினைகளை
எம்மவர் உடல்களில் செலுத்தி
ஊன் சிதைத்து

வல்லுறவுகளின் தொடர்ச்சியில்
வெடிமருந்திட்டுத் தெறிக்க
தாயரின் வயிற்றைக் கிழித்து
சிசுவை எரிக்கும் கோரமுமாக

ஈன்ற கருவறைகளின் வளத்திற்கு
ஏனைய கருவறைகளை
பலியிடும் நிகழ்வுகள்

கருப்பாதையடைத்து
அதன் மீதே அரியணையேறும்
பாசாங்குடனான சித்தாந்தங்கள்
அறிந்ததில்லை எம்மின் முழுமையை

யாம் உயிர்மாய்க்கும் தகவுகளோ
உடல்சிதைக்கும்
ஆயுதங்களோ ஆகோம்

வரையறைகளும் குறியீடுகளும்
குறிவைத்தாலும்
யாம்
விழுங்கி ஒளிரும் சூரியக் கரும்புள்ளிகளாய்
உயிர்த்தலின்
தொப்பூழ்க் கொடியாய்த் தொடரும்
பெருவெளிப் பெண்

ந‌ன்‌றி - பெருவெ‌ளி‌ப்பெ‌ண்
ச. ‌விசயல‌ட்சு‌மி

வெப்துனியாவைப் படிக்கவும்