புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‌பிற‌ந்தநா‌ள்!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (14:20 IST)
webdunia photoFILE
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 117வது பிறந்தநாளான இன்று அவருடைய கவிதைகள் சிலவற்றை வாசகர்களின் கருத்திற்கு விருந்தாக்குகிறோம்.




தமிழ் அமுது!

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

உலக ஒற்றுமை!

கூடித் தொழில் செய்க!

தொழிலாளர் விண்ணப்பம்!

மானிட சக்தி!

முன்னேறு!

வெப்துனியாவைப் படிக்கவும்