ஓ‌ர் ஆ‌ப்‌ரி‌க்க க‌விதை

செவ்வாய், 27 அக்டோபர் 2009 (14:37 IST)
ந‌வீன ‌விரு‌ட்ச‌ம் இத‌‌ழி‌ல் வெ‌ளியான ஒரு ஆ‌ப்‌ரி‌க்க‌க் க‌விதை‌யி‌ன் மொ‌ழிபெய‌‌ர்‌ப்பு

த‌மிழா‌க்க‌ம் : லாவ‌ண்யா
ஆ‌ங்‌கில மூல‌ம் : பெ‌ன் ஒ‌க்‌ரி

கச‌ப்பான கால‌ப்பழ‌த்தை ரு‌சி‌ப்பத‌ற்காக
கடவு‌ள் செய்த அற்புதங்கள் நாம்
உயர் மதிப்பானவர்கள்
நம் துன்பங்கள் ஒரு நாள்
புவியில் வியப்புக்குரியவைகளாக மாறும்

இப்போது என்னைத் தகித்துக் கொண்டிருப்பவை
நான் மகிச்சியாயிருக்கும்போது பொன்னாகும்.
நம் வலியின் மர்மத்தை உணர்கிறாயா?
வறுமையைச் சுமந்தபடி
இனிமையானவைகளை கனவுகாண - பாட -
நம்மால் முடிகிறது.

இளஞ்சூடான காற்றை சுவையான பழத்தை
நீரிலாடும் விளக்குகளை
நாமெப்போதும் சாபமிடுவதில்லை.
நாம் வலியுடனிருக்கும்போதும்
நாமனைத்தையும் ஆசிர்வதிக்கிறோம்.
மெளனமாக ஆசிர்வதிக்கிறோம்

அதனால்தான் நம் இசை மதுரமாயிருக்கிறது.
காற்று நினைவில் வைத்துக் கொள்ளுமாறு.
நிகழ்ந்தபடியிருக்கும் இரகசிய அற்புதங்களை
காலம் மட்டுமே வெளிக்கொணரும்.
இறந்தவர்கள் பாடுவதை நான் கூடக் கேட்டிருக்கிறேன்.

அவர்களென்னிடம் சொல்கிறார்கள்
இந்த வாழ்க்கை நலமிக்கது
மென்மையாக உயிர்ப்போடு
எப்போதும் நம்பிக்கையாக வாழென்று.
இங்கேயொரு விந்தை

அங்கேயொரு ஆச்சரியமென
கண்ணுக்குத் தெரியாத ஒன்று நகர்த்துமொவ்வொன்றிலும்
வானம் முழுக்கப் பாடல்களிருக்கின்றன.
விதி நம் நண்பன்.

ந‌ன்‌றி - ந‌வீன ‌விரு‌ட்ச‌ம்
காலா‌ண்டு இத‌ழ்
ஜனவ‌ரி-மா‌ர்‌ச்சு 2004
(மே 2004‌ல் வ‌ந்து‌ள்ளது)

வெப்துனியாவைப் படிக்கவும்