எனக்கொரு மகன் பிறந்தால்

Webdunia

சனி, 10 நவம்பர் 2007 (12:14 IST)
ல‌ட்சு‌மி‌யி‌ன் க‌விதை‌யி‌ல்

ஐயிரண்டு திங்கள் அடிவயிற்றில் உனை சுமந்து
அணையா விளக்காய் காப்பேனடா உன் அன்னை
பசிக்கு பாலோடு பகுத்தறிவு, பண்பாடு சேர்த்து
கொடுப்பேனடா உன் அன்னை
கதைச் சொல்ல நீ அழைத்தால் கார்கில் போரை
காவியமாய் படைப்பேனடா உன் அன்னை
பட்டமொன்றை நீ வாங்கி பண்பட்டவனாய்
ஆன பின் பட்டாளத்தில் சேரச் சொல்வேணடா
உன் அன்னை
போருக்கு நீ கிளம்பும் போது ரத்த உடலாய்
திரும்பி வருவாய் என்று தெரியாமல்
குங்குமப் பொட்டை வைத்தேனடா
உன் அன்னை
உன் உயிர் இந்த மண்ணை விட்டு போய்
விட்டதே என்பதற்காக அழவில்லையடா
உன் அன்னை
உன் உயிர் இந்த மண்ணிற்காக போனதை
நினைத்து பெருமைப் பட்டு வீரவணக்கம்
செய்பவளடா உன் அன்னை
இத்தோடு முடியவில்லையடா என் பணி
என் பிள்ளை செய்த பணியை உன் பிள்ளையும்
செய்ய வேண்டும் என்று நினைப்பவளடா
உன் அன்ன

வெப்துனியாவைப் படிக்கவும்