மகாகவி பாரதியார் 125வது ஆண்டு விழா கவிதை, கட்டுரைப் போட்டிகள்

Webdunia

செவ்வாய், 12 ஜூன் 2007 (20:29 IST)
பிரான்சு மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாகுழுவின் சார்பில் கவிதை, கட்டுரை, கதைப் போடிகள் நடத்தப்படுகின்றன. போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ், கேடயம் வழங்கப்படுகின்றன.

பிரான்சு தலைநகர் பாரீசில் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி மகாகவி பாரதியாரின் 125 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி உலகம் தழுவிய கவிதை, கட்டுரை, கதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசும் விருதும் வழங்கப்படுகிறது.

பாரதியார் படைத்துள்ள கவிதை, கட்டுரை, கதைகளில் உள்ள கருத்துக்களை மையமாக கொண்டு சொந்தமாக எழுதி அனுப்ப வேண்டும். ( பாரதியார் வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாக எழுத வேண்டாம்) தமிழ், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் படைப்புகளை அனுப்பலாம்.

கவிதை 20 முதல் 30 வரிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக் கவிதையிலும், புதுக்கவிதையிலும் எழுதலாம். படைப்புகளை அஞ்சல் அல்லது மின் அஞ்சல் வழியாக அனுப்பலாம். கவிதை கட்டுரை, கதை ஒவ்வொரு பிரிவிற்கும் பரிசுத்தொகை, சான்றிதழ், கேடயம் வழங்கப்படும்.

படைப்புகளை கீழ் காணும் மின்னஞ்சலிற்கு அனுப்பவும் :

[email protected]
[email protected]
[email protected]

தேர்வு செய்யப்படாத படைப்புகள் திருப்பி அனுப்ப இயலாது. தேர்வு செய்யப்பட்ட முடிவுகள் நாளேடுகளிலும், இணையதளங்களிலும் அறிவிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்