என் கல்லறை வாசகம் - கவிஞர் லட்சுமி

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (15:53 IST)
நான் பிறந்த போது மரண வேதனை
அனுபவித்ததாய் என் தாய் சொன்னால்
ஆனால் என் தாய்க்கு நான் கொடுத்த
வலியை இன்று நான் உன்னிடத்தில்
இருந்து பெற்றுக் கொண்டேனடி

உன் விழி என்னும் உளி எடுத்து
என்னை
காதல் சிற்பமாக செதுக்கி விட்டாய்
செதுக்கிய சிற்பத்தை இன்று அதே
உளியால் உடைத்துக் கொள்கிறாய் நியாயமா
மணவறையில் உன் மணாளனாய் அமர நினைத்தேன்
மணமகளாய் நீ
ஆனால்
மணாளனாய் இன்று வேறு யாரோ
உன்
மணவறையில் எனக்கு இடம் இல்லை என்றதும்
கல்லறை எனக்கு இடம் கொடுக்கப் போகிறது
எனவே
என் கல்லறைக்கு நானே வாசகத்தினை
பதிவு செய்து விட்டேன் உன்னை நினைத்து
இறக்கும் போது மரணமும் எனக்கு
மாலையிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்