வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் : புதிய இணையதளம்

வியாழன், 5 ஜூன் 2008 (12:40 IST)
வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விவரங்கள் அறிந்து கொள்ள புதிய இணைய தளத்தை போக்கவரத்துத் துறை துவக்கியுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து பகுதி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து துறையை கணினிமயமாக்குவதன் ஒரு பகுதியாக போக்குவரத்துத் துறை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக இசர்வீசஸ்.டிஎன்.ஜிஓவி.இன்/டிரான்ஸ்போர்ட் என்ற இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தல், குறைகளை கூறுதல் போன்று பல்வேறு பயன்களை பொதுமக்கள் பெறலாம்.

தற்போது போக்குவரத்து அலுவலகங்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணி முடிந்த பிறகு வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் அனுமதி சீட்டு பெறுதல் உள்ளிட்ட பல தகவல்களை இணையதளம் மூலம் பெற இயலும்.

வெப்துனியாவைப் படிக்கவும்