9, 18, 27 - ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் என்ணங்கள் பூர்த்தியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். மனக்குழப்பங்கள் விலகும். குடுபத்தில் உங்கப்பேச்சுக்கு மதிப்பு கூடும்.
கணவன்-மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
தாயின் உடல் நிலை சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். வெளிவட்டாரம் பரபரப்பாக அமையும். எதிர்பார்த்த பணவரவு கைக்கு வந்து சேரும்.
கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். வி. ஐ. பி களின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் நிலவி வந்த வீண் செலவுகளை குறைப்பீர்கள்.
புண்ணிய தலங்கள் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி பெறுகும். குழந்தை பாக்யம் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மாணவர்கள் உயர் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் எல்லைக்குட்பட்டு பழகுவது நல்லது.
வியாபாரத்தில் சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். புது யுக்திகளை கையாளுவீர்கள். அனுபமிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். ஷேர், உணவு வகைகளால் ஆதாயம் பெறுகும். பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.
உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு பெறுகும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வேறு நிறுவனங்களிலிருந்து புது வேலைவாய்ப்புகள் தேடி வரும். சம்பள உயர்வு உண்டு. முன்னேற்றம் காணும் மாதமாகும்.