6, 15, 24

Webdunia

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (15:52 IST)
6, 15, 24-ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கொஞ்சம் அலைச்சலும், வீண் செலவுகளும் வந்து போகும் என்றாலும் நன்மையே பிறக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முன் கோபம், டென்ஷன் விலகும்.

பணவரவு தேவையான அளவு இருக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உடல் நிலை சீராக இருக்கும். பொண்ணுக்கு நல்ல வரண் அமையும். உடன் பிறந்தவர்களால் நிலவி வந்த மனஸ்தாபங்கள் விலகும்.

சொத்துச் சிக்கல்களை சமாளிப்பீர்கள். தலை வலி, மூச்சுப்பிடிப்பு விலகும். பெற்றொரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் பெறுகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். தாயின் ஆதரவு உண்டு.

மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும். உயர் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். குல தெய்வப்பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மை உண்டு.

வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் தொந்தரவு விலகும். புது நபர்களின் சந்திப்பு நிகழும். பாக்கிகளை நிதானமாக வசூலிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் சுமுகமான லாபம் உண்டு.

உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். முயற்சியால் முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்-1, 3, 10, 12, 19, 21, 28, 30

அதிஷ்ட எண்கள் -1, 3

அதிஷ்ட நிறங்கள்- ஆரஞ்சு, வெள்ள

அதிஷ்ட கிழமைகள்- செவ்வாய், வெள்ளி

வெப்துனியாவைப் படிக்கவும்