6,15,24 எண் ஜோதிடம்

Webdunia

ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (16:45 IST)
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசுபணம் புரளும்.

என்றாலும் கொஞ்சம் செலவு இருக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.கணவன் &மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள்.பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறைக்காட்டுங்கள்.அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள்.உடன் பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள்.அரசுக் காரியங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம்.தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து போங்கள்.இங்கிதமாக பேசி கடினமான வேலைகளைக் கூட முடிப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வி.ஐ.பிகளின் சந்திப்பு நிகழும்.வீடு,வாகன பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும்.அக்கம்&பக்கம் வீட்டாருடன் குடும்பவிசயங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.வியாபாத்தில் அதிரடி முடிவுகள் வேண்டம்.பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள்.வேலையாட்களின் ஒத்துழைப்பு கிட்டும்.உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள்.மேலதிகாரியின் ஆதரவு உண்டு.சக ஊழியர்களைப் பற்றி குறைக் கூறவேண்டாம்.கலைத்துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கையிருப்பு கரந்தாலும் உற்சாகம் தரும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்:1,9,10,18,19,27,28
அதிஷ்ட எண்கள்:1,9
அதிஷ்ட நிறங்கள்:மெருன்,கிரே
அதிஷ்ட கிழமைகள்:திங்கள்,வெள்ளி

வெப்துனியாவைப் படிக்கவும்