கடின உழைப்பை கண்டு அஞ்சாத எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.