9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். மாதத்தின் மையப்பகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும், திடீர் பயணங்களும் துரத்தும். சமையலறை சாதனங்கள், ஃப்ரிட்ஜ் பழுதாகும். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும்.
கன்னிப்பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வீண் பழி, மனக்குழப்பம், தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அலட்சியப் போக்கு மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகக்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது.