7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கை பெருகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். புதுத் திட்டங்கள் நிறைவேறும்.
கல்வியாளர்கள், வி. ஐ. பிகளுக்கு நெருக்கமாவீர்கள். நட்பு வட்டம் விரியும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து மனஇறுக்கம், மனைவியுடன் வாக்குவாதம் வந்து செல்லும். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வாகனத்தை இயக்கும்போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும்.