மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

புதன், 1 மார்ச் 2017 (18:47 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


 


எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். ஆனால் தொண்டை புகைச்சல், கழுத்து வலி, வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. விலை உயர்ந்த நகைகளை கவனமாக கையாளுங்கள். 
 
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். 
 
கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். மேலதிகாரியால் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். 
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சிக்கனம் தேவைப்படும் மாதமிது.    
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 12, 21, 10
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

வெப்துனியாவைப் படிக்கவும்