2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அலைச்சல், டென்ஷன், ஏமாற்றம், தூக்கமின்மை விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள்.
கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் முன்கோபம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்துப் போகும். பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.
கன்னிப் பெண்களே! எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத வேலைகள் முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து சின்ன சின்ன யுத்திகளை கையாளப்பாருங்கள். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். அலுவலக விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவார்கள். அனுபவ அறிவை பயன்படுத்த வேண்டிய மாதமிது.