ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

வியாழன், 1 ஜூன் 2017 (21:06 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை உயர்த்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 


 

 
எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புது பதவிகள் தேடி வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். 
 
பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மாதத்தின் பிற்பகுதியில் காரியத் தடை, முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழத்தல், வீண் விரையங்கள், திடீர் பயணங்களால் சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். 
 
பிற்பகுதியில் விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடையும். என்றாலும் அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். 
 
அரசியல்வாதிகளே! உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். பங்குதாரர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். 
 
கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த படைப்புகள் வெளியாகும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். நினைத்தது நிறைவேறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 6, 10
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, சில்வர்கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

வெப்துனியாவைப் படிக்கவும்