குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து உடல் வலி, முன்கோபம் விலகும். ஆனால் பேச்சில் நிதானம் தேவை. பழைய பிரச்னைகள், சிக்கல்கள், வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்களின் நட்பு கிடைக்கும்.