5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் திடீர் யோகம், பணவரவு உண்டாகும்.
சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் உடல் வலி, களைப்பு வந்துப் போகும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சி உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அனுகூலம் உண்டு. திருமணம் முடியாதவர்களுக்கு முடியும். தந்தைவழியில் மதிப்புக் கூடும். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் தேடி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.