ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும்.
சகோதர வகையில் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். வீடு, நிலம் வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீடு மாறுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூகமானப் பேச்சால் தீர்வு காண்பது நல்லது. திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் லாபம் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். மாதத்தின் பிற்பகுதியில் சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்.