ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.
பயணங்களால் திருப்பம் உண்டாகும். பழைய சொந்த&பந்தங்கள் தேடி வரும். வேலைக் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை அமையும். ஒரு சொத்தை தந்து மற்றொன்று வாங்குவீர்கள். சகோதர ஒற்றுமை வலுக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.