பொது காரியங்களில் விருப்பம் உள்ள ஒன்பதாம் எண் வாசகர்களே நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல்படுவீர்கள். இந்த மாதம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும்.
தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமாகலாம். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும்.