ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

சனி, 31 டிசம்பர் 2016 (16:56 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும்.


 
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். குடும்பத்தில் கல்யாணம்,  சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். 
 
தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர்,  நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மாதத்தின் மையப்பகுதியில் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். கை,  கால் வலி,  தலைச்சுற்றல் வந்து நீங்கும். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். நெளிவு,  சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 
 
கலைத்துறையினர்களே! வேற்றுமொழிவாய்ப்புகளால் புகழடைவீர்கள். தொட்ட காரியம் துளிர்க்கும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 3, 9, 12, 24
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

வெப்துனியாவைப் படிக்கவும்