7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் பணவரவு உண்டு. விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.
மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். உறவினர், நண்பர்களின் வருகை அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டங்கள் நீங்கும். கொஞ்சம் சேமிக்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். ஆனால் செலவுகள் இருக்கும்-. வாகனம் பழுதாகி சரியாகும்.
அதிஷ்ட தேதிகள்:6,16,11,15,24
அதிஷ்ட எண்கள்:1,4
அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தாபச்சை,பிங்க்
அதிஷ்ட கிழமைகள்:செவ்வாய்,வியாழன்