2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அனுபவ அறிவு வெளிப்படும்.
உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை கண்டு எல்லோரும் அதிசயிப்பார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழுதான வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.
நீண்ட நாட்களாக பார்த்து பேச நினைத்த நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள்.
வழக்கில் வெற்றி கிட்டும். எங்குச் சென்றாலும் புகழடைவீர்கள். கௌரவம் ஒருபக்கம் உயரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். என்றாலும் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் கூடுதலாக கடன் வாங்கி விரிவுப்படுத்துவீர்கள், அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். கேட்ட இடத்திற்கே மாற்றமும் கிடைக்கும்.
கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் தீரும் மாதமிது.