ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

திங்கள், 31 ஜூலை 2017 (17:46 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.


 


புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தூரத்து சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். 
 
பழைய இனிய சம்பவங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்வீர்கள். என்றாலும் சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள். மாதத்தின் மையப்பகுதி முதல் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். அவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 
 
அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவுவார்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சவாலான காரியங்களை எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள். மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். 
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். குடும்ப ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 3, 21, 27
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, க்ரீம்வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

வெப்துனியாவைப் படிக்கவும்