ஆகஸ்ட் 2021 - 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத ஒன்பதா எண் அன்பர்களே, நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர். இந்த மாதம் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
மாணவர்கள் யாருக்கும் உத்திர வாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
 
பரிகாரம்: விநாயக பெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்