செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

சனி, 1 செப்டம்பர் 2018 (14:15 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:புதிய முயற்சிகளை எப்போதும் செய்யும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம்எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்துக்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும்.

இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள்.

பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனாலும் வீண்பழி உண்டாகலாம்.

அரசியல்துறையினர் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாகணபதிக்கு மஞ்சள் வஸ்திரம் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்