எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிக்கும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.
வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். சொல்வன்மை அதிகரிக்கும்.
பெண்களுக்கு தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.