இந்திய பெண்ணுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்!

புதன், 13 பிப்ரவரி 2008 (19:33 IST)
செல்வாக்கு மிக்க 15 பெண்கள் பட்டியலில் அமெரிக்கா வாழ் இந்தியர் இடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தனது ஆக்கப்பூர்வமான சிந்தனையின் மூலம் தங்களது நிறுவனத்தின் சிறப்பான முன்னேற்றத்திற்கு வழிவகுத்த 15 பெண்களின் பட்டியலை 'பிங்க்' என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் வாரியரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோட்டரோலாவில் இதே பதவி வகித்த வாரியர் (47) கடந்த டிசம்பர் மாதத்தில்தான் சிஸ்கோ நிறுவனத்தில் சேர்ந்தார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த வாரியர், டெல்லி ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் பொறியிய்ல் பிரிவில் பி.எஸ். பட்டமும், கார்நெல் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டமும் பெற்றார். பிறகு 2007-ம் ஆண்டு நியுயார்க் பாலிடெக்னிக் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மருத்துவம் பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்