உலகள‌வி‌ல் 10 கோடீஸ்வரரில் இந்தியர்கள் 4 பேர்

வியாழன், 12 மார்ச் 2009 (12:33 IST)
உலகின் ‌மிக‌ப்பெ‌ரிய கோடீஸ்வரர்களுக்கான ப‌ட்டிய‌லி‌ல் இ‌ந்த ஆ‌ண்டு 24 இ‌ந்‌திய‌ர்க‌ள் இட‌ம்‌பிடி‌த்து‌ள்ளன‌‌ர்.

போர்ப்ஸ் பத்திரிகை ஆ‌ய்வு செ‌ய்து வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ப‌ட்டிய‌லி‌ல் இந்த ஆண்டு 24 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளது ம‌ட்டும‌ல்லாம‌ல், அவர்களில் நான்கு பேர் முத‌ல் 10 பணக்கார வரிசையில் உய‌ர்‌ந்து‌ள்ளன‌ர்.

உலகின் முத‌ல் கோடீஸ்வரர் என்ற இடத்தை பப்பெட் பிடித்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.1 லட்சம் கோடி. இரண்டாம் இடத்தில் பில் கேட்ஸ் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.2.8 லட்சம் கோடி.

ஆர்சிலர் மிட்டலின் தலைவ‌ர் லட்சுமி நிவாஸ் மிட்டல், ரூ.2.25 லட்சம் கோடி சொத்துடன் 4வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி ரூ.2.15 லட்சம் கோடி சொத்துடன் 5வது இடம் வகிக்கிறார். அவரது தம்பி அனில் அம்பானி 6வது இடம் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.2.1 லட்சம் கோடி.

உலக அளவில் ரியல் எஸ்டேட் தொழிலில் முதல் பணக்காரராக இருக்கும் டிஎல்எப் அதிபர் கே.பி. சிங், இந்தப் பட்டியலில் 7வது இடம்பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி.

வெப்துனியாவைப் படிக்கவும்