மீன் ஊறுகாய்

தேவையான பொருட்கள

மீன் (முள் நீக்கியது) - 1 கில
இஞ்சி - 125 கிராம
பூண்டு - 125 கிராம
கடுகு - 60 கிராம
மஞ்சள் பொடி - 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 1 கோப்ப
வினிகர் - 400 கிராம
மிளகாய் வற்றல் - 60 கிராம
சீரகம் - 35 கிராம
உப்பு - 2 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் - 1/2 கில
மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி

செய்முற

1. மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர வைக்கவும்.

3. எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொறித்தெடுக்கவும்.

4. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

5. எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும்.

6. மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்