கோழி சூப்

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:49 IST)
கோ‌ழி‌க்க‌றி உடலு‌க்கு சூ‌ட்டை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல் கோடை‌‌க் கால‌ம் வரை சூ‌ப்பை த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது. எ‌னினு‌ம் தெ‌ரி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். கோ‌ழி‌க் க‌றி சூ‌ப் செ‌‌ய்வது எ‌ப்படி எ‌ன்று பா‌ர்‌ப்போ‌ம்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌‌ண்டியவை :

கோழி இறைச்சி - 1/4 ‌கிலோ
பெரிய வெங்காயம் - 2
புதினா - ஒரு பிடி
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
வெண்ணெய்- ஒரு மேஜை கரண்டி
கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை

செய்முறை:

கோழி க‌றியை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திர‌த்‌தி‌ல் கோ‌‌ழி க‌றியை போ‌ட்டு தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு ம‌ஞ்ச‌ள் தூ‌ள் ம‌ட்டு‌ம் போ‌ட்டு வேக ‌விடவு‌ம்.

கோழி க‌றி வெ‌ந்தது‌ம் அதனை இற‌க்‌கி குழ‌ம்பு கர‌ண்டியை வை‌த்து நன்கு நசுக்கி விட்டு, மீண்டும் அடுப்பில் தண்ணீருடன் கொதிக்க வைக்கவும்.

அடு‌ப்‌பி‌ல் வாணலி வை‌த்து வெண்ணெயை போட்டு சூடாக்கவும். வெ‌ண்ணெ‌ய் உருகியதும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்து‌ள்ள வெங்காய‌த்தை போட்டு வதக்கவு‌ம்.

இதனை கொ‌தி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் க‌றி‌யி‌ல் கொட்டி மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

பின்னர் கோ‌ழி சூ‌ப்பை இறக்கி நறு‌க்‌கிய க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி தழைகளை மேலாக தூ‌வி சூடாக ப‌றிமாறவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்